ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் ஒரே நாளில் 31 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். நேற்று ஒரே நாளில் மட்டும் 31 பேர், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை ஆர்.கே.நகரில் போட்டியிட 55 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சசிகலா அணியின் டிடிவி …
Read More »இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அ.தி.மு.க. இரண்டாக உடைந்து சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு ஏப்ரல் 12–ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். இதனால் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்? என்ற கேள்வி …
Read More »கா.கலைக்கோட்டுதயம் சீமான் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல்
கா.கலைக்கோட்டுதயம் சீமான் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கா.கலைக்கோட்டுதயம் இன்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆர்.கே.நகர் தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். அவர் இன்று தனது வேட்பு மனுவை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில், தேர்தல் …
Read More »சசிகலா பொதுச் செயலாளர் பதவி தேர்தல் கமிஷனிடம் ஓ.பி.எஸ். அணி 61 பக்க மனு தாக்கல்
சசிகலா பொதுச் செயலாளர் பதவி தேர்தல் கமிஷனிடம் ஓ.பி.எஸ். அணி 61 பக்க மனு தாக்கல் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்து எடுக்கப்பட்டது கட்சியின் சட்ட விதிகளின் படி செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனிடம் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த எம்.பி.க்கள் புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து சிறையில் உள்ள சசிகலாவுக்கு தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. …
Read More »ஆர்.கே.நகரில் ஜெ.தீபா போட்டி இன்று மாலை அறிவிக்கிறார்
ஆர்.கே.நகரில் ஜெ.தீபா போட்டி இன்று மாலை அறிவிக்கிறார் மறைந்த ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியுடன் சேர்ந்து அவர் அரசியலில் ஈடுபடுவார். அந்த அணி பலமான அணியாக உருவெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கி தீபா தனியாக செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் 24-ந்தேதி ஜெயலலிதா …
Read More »