Tag: அறிவிப்பு

சசிகலா முதல்வராவதை

மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர்

தமிழக மக்களை காக்க நாளை அதிரடி முடிவு எடுக்கப் போவதாக நடிகரும், லட்சிய திமுக நிறுவனருமான டி.ராஜேந்தர் இன்று தெரிவித்துள்ளார். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் தீவிர அரசியலில் இறங்குவதற்கான பணிகளில் இறங்கிவிட்டனர். அதுபோல் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயன்று ஒருபுறம் விஷாலும் அரசியலில் காலடி எடுத்து வைத்துவிட்டார். அதேபோல், தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என எல்லோரும் ஒன்றாக இணையும் தருணத்தில் நான் அரசியலுக்கு வருவேன் எனவும், நடிகர்கள் அரசியலுக்கு […]

பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியின் பெயர் அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சியின் பெயரை மிக விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஏற்கனவே கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் மலேசியாவில் நடந்த நட்சத்திர விழாவின் போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் தேதியையும் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி முதல் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாகவும், அன்றைய தினம் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை […]

அணு ஆயுத சோதனையை கைவிட மாட்டோம் – வடகொரியா அறிவிப்பு

ஐ.நா. தீர்மானத்தை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை ஐ.நா.சபையும், அமெரிக்காவும் விதித்துள்ளன. புதிதாக மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க மந்திரிகள் வலியுறுத்தி வருகின்றனர். வடகொரியாவுக்கு எதிராக கடினமான நிலைப்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்துள்ளார். இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. […]

தமிழகத்தில் 25-ந்தேதி கடையடைப்பு – பஸ், ஆட்டோக்கள் ஓடாது – தொழிலாளர் முன்னேற்ற சங்க (எல்.பி.எப்) பொதுச் செயலாளர் சண்முகம் அறிவிப்பு

தமிழகத்தில் 25-ந்தேதி பஸ், ஆட்டோக்கள் ஓடாது என்று தொழிலாளர் முன்னேற்ற சங்க (எல்.பி.எப்) பொதுச் செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார். தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தை தி.மு.க ஒருங்கிணைத்துள்ளது. அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க பிற கட்சிகள் பங்கேற்கவில்லை. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்ட் […]

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டம் -மீனவர் சங்கத்தலைவர்கள் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என மீனவர் சங்கத்தலைவர்கள் அறிவித்துள்ளனர். ராமேசுவரம் மீனவர் சங்கத்தலைவர்கள் போஸ், தேவதாஸ், ஜேசு, எமரிட், சகாயம் ஆகியோர் இன்று மீனவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதில் திரைப்பட இயக்குநர் கவுதமன் மற்றும் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ஆலோசனைக்கு பின் மீனவர் சங்கத்தலைவர்கள் கூறியதாவது:- வருகிற 7-ந் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இலங்கை சென்று […]

விவசாயிகளுக்கு வறட்சி-எடப்பாடி பழனிச்சாமி

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.2247 கோடி அளித்து எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.2247 கோடி அளித்து எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவித் தொகை வழங்கிட, வருவாய் மற்றும் வேளாண் துறைகள் இணைந்து செய்த கணக்கெடுப்புப் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பின்படி 32,30,191 விவசாயிகளுக்குச் சொந்தமான 50,34,237 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதால் பயிர் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு இடு பொருள் நிவாரண உதவித் தொகையாக 2,247 கோடி ரூபாய் வழங்கப்பட […]