அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக பல்வேறு பொது அமைப்புக்களினால் ஜனாதிபதிக்கு கோரிக்கையை விடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். -இந்த நிலையில் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யக் கோரி மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு நேற்று(26) திங்கட்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். […]
Tag: அரசியல் கைதி
அரசியல் கைதி ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளியுங்கள் : ஜனாதிபதிக்கு விக்கி கடிதம்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி, ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்தசுதாகர் என்ற அரசியல் கைதி, 2008ஆம் ஆண்டு தொடக்கம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனையை விதித்திருந்தது. இந்நிலையில், கடந்த 15ஆம் திகதி, ஆனந்தசுதாகரின் மனைவி யோகாராணி நோயினால் மரணமானார். இதனால், அவர்களின் இரு குழந்தைகளும் தாயையும் […]
பத்து வருடங்களாகத் தடுப்பிலிருந்த அரசியல் கைதி ஒருவர் விடுவிப்பு!
சுமார் 10 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டார். கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயஇராம் இராமநாதன் 2007ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இரகசியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். அன்றிலிருந்து அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். கொழும்பிலிருந்து கட்டுநாயக்கா செல்லும் ரயில் பாதையை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதித் திட்டம் தீட்டியமை, இராணுவத்தின் உயர் அதிகாரியின் நடவடிக்கைகளை வேவு பார்த்து விடுதலைப்புலிகள் […]





