ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி வேறு எந்த கட்சிகளுடனும் இணைந்து உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை முன்னெடுப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானம் ஒன்றையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை முன்னெடுப்பது தொடர்பில் இன்னும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Read More »துமிந்தவின் பதவியை பறிக்கவே வேண்டாம்! – அவர் சிறந்த இளம் தலைவர் என்கிறார் அமரவீர
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிலிருந்து அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை நீக்கவேண்டுமென அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ள நிலையில், அதற்குரிய தேவைப்பாடு இல்லையென அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். துமிந்த திஸாநாயக்க சிறந்த இளம் தலைவராகச் செயற்பட்டுவருகின்றார் என்று சு.கவின் முக்கியஸ்தரான அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய சகாக்களுள் ஒருவராகக் கருதப்படும் அமைச்சர் மஹிந்த அமரவீர, …
Read More »