‘தி.மு.க. தான் எங்களுக்கு பிரதான எதிரி’ என்றும், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களை எதிர்க்கும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள்’ என்றும் ஜெ.தீபா கூறினார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புது வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தேர்தல் பணிமனையை பேரவையின் பொது செயலாளர் ஜெ.தீபா திறந்து வைத்தார். இந்த விழாவில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி, மாவட்ட பொறுப்பாளர்கள் குமரி செந்தில்குமரன், கடலூர் செல்வவிநாயகம், மற்றும் செல்வராஜாமணி […]





