உறவுகளை இழந்து தவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கையை அலட்சியப்படுத்தாது, அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்களுடனான சந்திப்பின்போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் கவனயீர்ப்பு பேராட்டம் இன்று […]





