இறுதி யுத்தத்தின்போது இராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஆகையால் அவர்களை தண்டிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பபோவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலுள்ள ஊடகமொன்று போர்க்குற்ற விசாரணை குறித்து கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,“இராணுவத்தினர் குருதி சிந்தி நாட்டை மீட்டெடுத்தவர்கள். ஆகையால் அவர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதே எனது நிலைப்பாடு. ஆனாலும், இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று யாரும் […]
Tag: மைத்திரி
மைத்திரி மீது நீதிமன்றத்தில் மற்றுமொரு புகார்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான நிரந்தர தலைவரை நியமிக்காமல் அரசியலமைப்பை மீறி வருகிறார் என்று குற்றம்சாட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. 14 நாட்களுக்கு வரையே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் ஒருவரை நியமிக்க முடியும் என்ற போதும், நீதியரசர் தீபாலி விஜேசுந்தரவை மீண்டும் மீண்டும் நியமிக்கும் சிறிங்கா அதிபரின் நடவடிக்கையை சவாலுக்குட்படுத்தியே இந்த மனு தாக்கல் […]
மைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு
நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஜனவரி 15 முதல் 2018 டிசம்பர் 31 வரை நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரியின் உத்தரவின் பிரகாரம் இந்த ஆணைக்குழு இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த ஆணைக்குழுவிற்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு சரோஜினி வீரவர்தன, […]
மைத்திரி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் ?
மைத்திரிபால சிறிசேனவை அங்கொட மனநல மருத்துவ ஆய்வகத்தில், மனநல பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது. மைத்திரிபால சிறிசேனவின், நடவடிக்கைகள், அவர் உறுதியான மனநிலையில் இருக்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால், அவரை அங்கொட மனநல மருத்துவமனையில் மேனநல சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கோரி, தக்சிலா லக்மாலி ஜெயவர்த்தன என்ற பெண், மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். […]
இன்று ஒரு விடயத்தில் தப்பினார் மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு என பெண் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அத்தோடு அரசுக்கு ஏற்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் சட்ட செலவினங்களைச் மனுதாரர் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளரான தக்சிலா ஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் இந்த நீதிப்பேராணை மனு கடந்த ஆண்டு டிசெம்பர் 10 ஆம் திகதி […]
மைத்திரி தன்னை அழித்து விட்டதாக ஒருவர் ஒப்பாரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை அழித்து விட்டார் என கடுவலை நகர சபையின் முன்னாள் மேயர் ஜீ.எச். புத்ததாஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பொது வேட்பாளராக களமிறங்கியப் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை அழைத்ததாகவும் அதற்கமைய தான் அவருக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். […]
மைத்திரிக்கு மனநல கோளாறு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு என பெண் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்யக்கோரி இடைபுகு மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர சார்பில் அவரது சட்டத்தரணிகளால் இந்த இடைபுகு மனு தாக்கல் செய்யப்பட்டது. சிவில் செயற்பாட்டாளரான தக்சிலா ஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் இந்த […]
2019 ஆம் ஆண்டில் அடங்கினார் மைத்திரி
2019 ஆம் ஆண்டிற்கான முதல் அமைச்சரவை முன்மொழிவுகள் அனைத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஆரம்பமானது. அதன் படி அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளும் இன்று ஜனாதிபதியால் ஒப்புதல் வழங்கப்பட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். மேலும் அவற்றில் பெரும்பாலான திட்டங்களை நிதி அமைச்சகத்துடன் தொடர்புபடுத்தியதாக இருந்தது என்றும் […]
புதிய ஆண்டின் புதிய அமைச்சரவையில் மனந்திறந்த மைத்திரி!
அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் நான் ஈடுபடவில்லை. இனிமேல் ஈடுபடபோவதுமில்லை. என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டுக்கான புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது புத்தாண்டு வாழ்த்துகளை முதலில் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறுகிய உரையொன்றை நிகழ்த்தியுள்ளார். அமைச்சுகளுக்கான நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் ஒதுக்கப்பட்டுள்ள விதம் தொடர்பில் சில அமைச்சர்கள் அதிருப்தி […]
தமிழர்களை ஏமாற்றிய மைத்திரியின் அடுத்த தந்திரம்
வடக்கு கிழக்கிலுள்ள 14,769 ஏக்கர் காணிகள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள சகல காணிகளையும் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்க ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். எனினும், அவற்றில் 263.56 ஏக்கர் காணிகளை மாத்திரமே விடுவிக்கவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கில் 12,200 ஏக்கர் அரச காணிகளும் 2,569 ஏக்கர் தனியார் காணிகளும் இராணுவத்தின் வசமுள்ளதாக கடந்த நவம்பர் மாதம் […]





