தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுற்றாடல் பாதுகாப்பிற்கான பொறுப்பினை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அவர்கள் சகல இலங்கையர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். சுற்றாடல் பாதுகாப்பின் பெறுமதியை இன்று எமது நாடு மட்டுமன்றி முழு உலகமும் இனங் கண்டுள்ளதாக இன்று முற்பகல் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் நிறைவு வைபவத்தில் ரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை […]
Tag: மைத்திரி
மைத்திரி – மகிந்த இணைவார்களா ? பிரிவார்களா?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் கூட்டணி அமைப்பது தொடர்பான மூன்றாம் கட்ட கலந்துரையாடல் சற்று முன்னர் ஆர்மபமாகியுள்ளது. அத்துடன் இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தொடர்பிலும் கலந்துரையடப்படவுள்ளது.
மைத்திரி வெளியிட்டுள்ள அதிரடி கருத்து
மொழியினால் நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பது நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு தடையாக உள்ளது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இதனை கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். அனைத்து இன, மத பிரிவினர்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் ஊடாக […]
மரண தண்டனை குற்றவாளிகள் தொடர்பில் மைத்திரியின் முக்கிய அறிவித்தல்
மரண தண்டனை விதிக்கப்படவேண்டிய போதைப்பொருள் வர்த்தகர்களின் விபரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த நபர்களுக்கு விரைவில் மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மரண தண்டனையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருந்தார். யார் எதிர்த்தாலும் போதைப்பொருள் கடத்தல் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிச்சயம் என அவர் கூறியிருந்தார். அதன்படி போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான திகதி […]
பொது மக்களுக்கு மைத்திரி விடுத்துள்ள அறிவிப்பு
பாதீட்டு இடைவெளியை சமாளிப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டுக்காக ஒன்றாய் இருப்போம் என்ற தொனிப்பொருளில் புத்தளம் மாவட்டத்தில் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். பில்லியன் கணக்கான பாதீட்டு இடைவெளியை தணிப்பதற்கு நாம் அனைவைரும் முக்கியமான விடயங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பொதுமக்கள், பாதுகாப்பு தரப்பினர், அரச அதிகாரிகள் என்று பலரும் இந்த விடயத்தில் ஒன்றிணைய வேண்டும் […]
மைத்திரிக்கு இன்று ஆப்பு வைக்க காத்திருக்கும் ரணில் அணி
நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதம் இன்று இடம்பெறுகிறது. இன்றைய தினம் அரசியலரங்கில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஜனாதிபதியின் கீழ் உள்ள சுற்றாடல், பாதுகாப்பு அமைச்சுக்களிற்கான நிதி ஒதுக்கீட்டில் எந்த சிக்கலும் இருக்காதென தெரிகிறது. எனினும், ஜனாதிபதிக்கான விசேட ஒதுக்கீடுகளிற்கு ஐ.தேக.வின் எம்.பிக்கள் குழுவொன்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இன்றைய தினம் அவர்கள் வாக்கெடுப்பை கோருவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஐ.தே.கவின் சுமார் 45 எம்.பிக்கள், ஜனாதிபதிக்கான […]
நாடாளுமன்றத்தை புறக்கணித்த மைத்திரி
2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான குழுநிலை விவாதங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவில்லை. குறித்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணயிலிருந்து இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்தே இன்றைய விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை, குழுநிலை விவாதங்களின்போது தோற்கடிக்கப் போவதாக ஐ.தே.க.வின் பின்வரிசை உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். […]
அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் மைத்திரி!
பாதாள உலகத்தினரின் செயற்பாடுகள் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாதாள உலகத்தினருக்கும் தனியானதொரு அரசாங்கத்தை நடத்த இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாகாண ஆளுநர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.இதன்போதே ஜனாதிபதி கடும் தொனியில் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, போதைப்பொருட்களிலிருந்து இளம் தலைமுறையினரை பாதுகாப்பதற்காக எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘சுஜாத தருவோ’ எனப்படும் ‘கண்ணியமான […]
ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட விசேட அறிவிப்பு
உண்மையான நாட்டுப்பற்றுள்ள அரசியல்வாதிகள் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக பிரதானிகளின் சந்திப்பில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அதேபோல் , தேர்தல் வருடமான இவ்வருடத்தின் முதல் தேர்தலாக ஜனாதிபதி தேர்தல் இடம்பெறக்கூடும் எனவும் , தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கும் போது பொதுத்தேர்தல் அதற்கு முன்னர் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக […]
மைத்திரி ரணிலுடன் பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு
அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பாக மீண்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை மறுதினம் இது விடயமாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் கிளை பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று திருகோணமலையில் நடைபெற்றது. குறித்த சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசியலமைப்பு திருத்த முயற்சி ஆரம்பிக்கபட்டு பல படிமுறைகளை […]





