Tag: முஸ்லிம்

முஸ்லிம் அமைச்சர்களுக்கு மஹிந்த அழைப்பு

முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது கட்சியில் இணைந்துக்கொள்ள முடியுமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமஹா விகாரையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். புதிய முஸ்லிம் தலைமையை உருவாக்கும் செயற்பாட்டை தங்களது கட்சி முன்னெடுத்துள்ளது. ஆகையால் தற்போதுள்ள முஸ்லிம் தலைமைகளும் இதில் இணைந்துக்கொள்ள முடியுமென மஹிந்த அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைவதற்காக தமது கட்சியை […]

முஸ்லிம் தலைமைகளின் முடிவு வரவேற்கத்தக்கது

சிங்கள, பௌத்த, பேரினவாத வெறியாட்டத்திற்கு பதிலடியாக முஸ்லிம் தலைமைகள் எடுத்திருக்கும் முடிவை தாம் வரவேற்பதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியதாக குற்றம்சாட்டி ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை நேற்று இராஜினாமா செய்திருந்தனர். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன மத ரீதியிலும் எண்ணிக்கையிலும் குறைந்த சிறுபான்மையினத்தவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகவே இதை நாம் பார்க்கின்றோம். முஸ்லிம் தலைமைகள் மீண்டும் […]

புலிகளின் நகர்வுகளை முஸ்லிம்களே அரசுக்கு காட்டிக்கொடுத்தனர்

யுத்த காலத்தில் புலிகளின் பிரதேங்களுக்குச் சென்று அவர்களது நகர்வுகள் தொடர்பாக முஸ்லிம்களே அரசுக்கு தகவல்களை வழங்கியதாக பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தாவது, முஸ்லிம் சமூகத்தைப் பற்றி மிகமுக்கியமான ஒரு விடயத்தை தெரிவிக்க வேண்டும். இன்று நாம் வாழ்வதற்கு அவர்களின் அர்ப்பணிப்பே காரணம். அதற்காக அவர்களுக்கு நன்றி […]

சிறுபான்மையினரின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்துங்கள் ; கனடா வலியுறுத்து

சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும் வன்முறைக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் கனடா, இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது. இனங்களுக்கிடையிலான அமைதியின்மை காரணமாக இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலை குறித்து கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃரீலண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். முஸ்லிம் மக்களை இலக்குவைத்து இலங்கையில் இடம்பெற்றுவரும் இனங்களுக்கிடையிலான வன்முறை குறித்து கனடா ஆழ்ந்த கவலையடைந்துள்ளது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சுகளின் மூலம் நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட […]

கண்டியில் மீண்டும் ஊரடங்கு – இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதால் தொடர்கிறது பதற்றம்

கண்டி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட போதிலும், தெல்தெனிய, பல்லேகல காவல்துறை பிரிவுகளில் மீண்டும் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை அடுத்து, நேற்று பிற்பகல் 3 மணிக்கு கண்டி மாவட்டம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. எனினும், நேற்றிரவும் சில இடங்களில் பள்ளிவாசல்கள் முஸ்லிம்களின் வாணிப நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், […]

பாகிஸ்தான் சுதந்திர தின விழா: எல்லைப்பகுதியில் மிகப்பெரிய கொடியை ஏற்றி கோலாகல கொண்டாட்டம்

பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர விழாவை அந்நாட்டு மக்கள் மிக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தெற்காசியாவில் மிகப்பெரிய தேசியக் கொடியை இன்று லாகூர்-அட்டாரி எல்லைப் பகுதியில் ஏற்றப்பட்டது. வெள்ளையரின் ஆட்சியின்கீழ் ஒன்றுபட்ட பாரத தேசமாக அடிமைப்பட்டு கிடந்த நமது நாட்டுக்கு சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தீர்மானித்தபோது, இங்குள்ள இந்துக்களோடு முஸ்லிம் சமுதாய மக்கள் சேர்ந்து வாழ்வது சாத்தியப்படாது. எனவே, முஸ்லிம்களுக்கு என ஒரு தனிநாடு பிரித்து தரப்பட வேண்டும் என […]