முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு தருணங்களில் அவமதிக்கப்பட்டது தமிழகத்தின் பிரச்சினை – ராமதாஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு தருணங்களில் அவமதிக்கப்பட்டிருப்பதை தமிழக நலன் சார்ந்த சிக்கலாகவே பார்க்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் திடீர் அரசியல் மாற்றமாக அதிமுக தலைமைக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலகக்கொடி உயர்த்தியுள்ளார். இதை அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை […]





