Tag: மஹிந்த

மஹிந்த இன்று நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு?

நாட்டில் அரசியல் நெருக்கடி உச்சம்தொட்டுள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று(ஞாயிற்றுக்கிழமை) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை (113) ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி உறுதிப்படுத்தியுள்ளதால் பிரதமர் பதவியை துறக்கும் முடிவையே மஹிந்த அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. நவம்பர் 26 ஆம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதிவரை நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ள மஹிந்த, பொதுத்தேர்தலை […]

பொறுப்புகளை விட்டுக்கொடுக்க தயார் மஹிந்தவின் திடீர் அறிவிப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் பொருட்டு முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை விட்டுக் கொடுக்கவும் தயார் என மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற அரச ஆதரவு கட்சித் தலைவர்கள் மட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சிறுபான்மை சமூகத்தின் கட்சிகளை அரசாங்கத்திற்குள் இணைப்பது தொடர்பாக அவர்களுடன் மீண்டும் […]

மைத்திரி மஹிந்த

எதிர்வரும் தேர்தலில் மஹிந்த மைத்திரி கூட்டணியா? அதிர்ச்சியில் மக்கள்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி ஒன்றின் ஊடாக போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். இதற்காக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு திடீர் இன்ப அதிர்ச்சி கொடுத்த மஹிந்த

இலங்கையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான தொலைபேசி அழைப்புக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான தொலைபேசி அழைப்பு சேவை நிறுவனத்தினால் நூற்றுக்கு 10 வீதம் தொலைபேசி அழைப்புக்கான வரிப்பணம் குறைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் மக்களுக்கு வரி நிவாரணங்களை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அதன் ஒரு கட்டமாக தொலைபேசி அழைப்புக்கான வரிப்பணத்தை குறைப்பதற்கு, நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பிளந்தது மஹிந்த-மைத்திரி அணிகள்? திடுக்கிடும் தகவல்

அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு விடயத்தில் மைத்திரி – மஹிந்த அணிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி கடந்த 26ஆம் திகதி ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. […]

மகிந்தவிற்கு

மஹிந்த குறித்து ரணிலின் மிக முக்கிய செய்தி

எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த ராஜபக்ஸவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் வழங்கியுள்ள செவ்வியில், “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவருக்கே பிரதமர் பதவியை ஏற்க முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். அதாவது 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைய பிரதமர் ஒருவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு […]

தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரிடம் விலை போயுள்ளது?

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்காது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடுநிலையாக செயற்பட்டாலே போதும், அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை நாம் பெற்றுத்தருவோம். அரசியல் தீர்வு விடயத்தில் மைத்திரி -மஹிந்த கூறுவதையே சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான தீர்மானம் எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியிடம் விலை போயுள்ளார் ஒரு சிலர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவரையும் தவறாக வழிநடத்தி […]

மஹிந்த நாளை ஊழல், மோசடி ஆணைக்குழு

மஹிந்த அணிக்கு தாவும் மற்றுமொரு முக்கியபுள்ளி!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மகிந்த தலைமையிலான அரசாங்கத்திடம் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும் அதற்கு அவர்கள் அந்த அமைச்சுப் பதவியை தருவதற்கு இணங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் பேரம் பேசப்படுவதாகவும் அவர் கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

எரிபொருள் விலை தொடர்பில் மஹிந்த வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர், அதனை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைவடையும் போது அதற்கான இலாபத்தை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் எரிபொருள் விலை சூத்திரம் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த […]

மஹிந்த தலைமையில் புதிய அமைச்சரவை

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான விசேட கூட்டம் ஒன்று தற்போது கொழும்பில் இடம்பெறுவதாக கொழுப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாகவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மறுதினம் திங்கட்கிழமை அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் மற்றும் பிரதமரின் செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக குறித்த செய்தி தெரிவிக்கின்றது.