எதிர்க்கட்சித் தலைவராக குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவே தொடர்வார் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை அவர் சற்றுமுன்னர் கட்சித் தலைவர்களுக்கு அவர் விடுத்துள்ளார். அத்துடன் எதிர்க் கட்சியின் பிரதான அமைப்பாளராக மஹிந்த அமரவீர செயற்படுவார் என்றும் அவர் அறிவித்துள்ளார். கடந்த ஆட்சிக் குழப்பத்தின் பின்னர் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால் எதிர்க்கட்சித் தலைவர் யாருக்கு என்ற இழுபறி நிலை தொடர்ந்துவந்தது. நாடாளுமன்ற அங்கீகாரமற்ற கட்சியொன்றின் உறுப்புரிமை கொண்ட […]
Tag: மஹிந்த அமரவீர
இதுவரை தீர்மானம் இல்லை ?
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி வேறு எந்த கட்சிகளுடனும் இணைந்து உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை முன்னெடுப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானம் ஒன்றையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை முன்னெடுப்பது தொடர்பில் இன்னும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு போராட்டங்களுக்கு அஞ்சப்போவதில்லை: மஹிந்த அமரவீர
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும் தமிழக மீனவர்களையும் தடுத்து வைக்கப்படும் படகுகளையும் விடுவிக்குமாறு தமிழ் நாட்டில் எவ்வித போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், அரசாங்கம் தனது கொள்கையிலிருந்து மாறுபடாதென மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்றைய (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கையாண்டு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதால், கடல் வளம் பாதிக்கப்படுவதை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்தோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட […]
சு.கவின் 66ஆவது மாநாட்டை கொழும்பில் நடத்த ஏற்பாடு! – அமைச்சர் அமரவீர அறிவிப்பு
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாட்டை மிகவும் பயனுள்ளதாக நடத்துவதற்கான ஏற்பாட்டை கட்சியின் மத்திய குழு முன்னெடுத்துவருகின்றது” என்று மீன்பிடி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குருநாகலையில் கடந்த வருடம் சிறப்பாக நடைபெற்றது. இம்முறை 66ஆவது மாநாட்டை கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. செப்டெம்பர் மாதம் 2ஆம் […]
தேசிய அரசிலிருந்து வெளியேறினாலும் மஹிந்த அணியோடு சங்கமிக்காது சு.க.! – சுயாதீனமாக இயங்கவே 18 உறுப்பினர்களும் அனுமதி கோரினர் என்கிறார் அமரவீர
“தேசிய அரசிலிருந்து வெளியேறினாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மஹிந்த அணியான பொது எதிரணியில் இணையமாட்டார்கள்” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான மஹிந்த அமரவீர தெரிவித்தார். இது விடயம் தொடர்பில் முடிவொன்றை எடுப்பதற்காக சு.கவின் மத்திய செயற்குழு விரைவில் கூடும் எனவும் அவர் கூறினார். தேசிய அரசிலிருந்து வெளியேறுவதற்கு அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா உட்பட 18 சுதந்திரக் கட்சி […]





