Tag: புகையிரத ஊழியர்கள்

புகையிரத ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு

புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். பணிக்கு இணைத்தல், பதவி உயர்வு மற்றும் ஊதிய கொடுப்பனவு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அரசு உரிய தீர்வு வழங்காமையை கண்டித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். இவர்களின் கோரிக்கை குறித்து அண்மையில் பேச்சுகள் இடம்பெற்றதாக கூறப்பட்டாலும் அரசு உறுதிமொழி எதனையும் வழங்கியிராத சூழலிலேயே நாளை போராட்டத்தில் குதித்துள்ளனர்.