காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி: போராட்டம் தொடருமென மக்கள் எச்சரிக்கை அரச காணிகளை இராணுவத்தின் செயற்பாட்டிற்கு பெற்றுக்கொண்டு பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு பரிசீலனை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலாகத்திற்கு முன்னால் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களில் சிலர் இன்றையதினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இந்த சந்திப்பின்போதே விரைவில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் […]




