Tag: பயங்கரவாதிகளின்

பயங்கரவாதிகளின் குற்றத்தை 22 லட்சம் பேர் மீது திணிக்க வேண்டாம்

இஸ்லாத்தின் பெயரை வைத்துக்கொண்டு ஒருசிலர் செய்த பயங்கரவாதத் தாக்குதல், நாட்டில் உள்ள 22 இலட்சம் முஸ்லிம்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று (10) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். பள்ளிவாசல்களில் வாள்கள் மற்றும் கத்திகள் மீட்கப்படுவதாக ஊடகங்களில் காண்பிக்கின்றனர். திகனவில் 30 பள்ளிவாசல்கள் அடித்து நொருக்கப்பட்டபோது பள்ளிவாசல்களில் ஆயுதங்களை வைத்திருந்தவர்கள் அவற்றை எடுத்து யாரின் மீதாவது தாக்குதல்களை […]

பயங்கரவாதிகளின் 40 ஏக்கரிற்கும் அதிகமான கோட்டை படையினர் வசம்

ரிதிதென்னவில் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமொன்றை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமொன்று நேற்று காத்தான்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று ரிதிதென்ன பகுதியில் இன்னொரு பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேசசபைக்குட்பட்ட இந்த பயிற்சி முகாம் 40 ஏக்கரிற்கும் அதிக விஸ்தீரணமுடையது. இந்த காணி உரிமையாளர், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே, இன்று அங்கு தேடுதல் நடத்தப்பட்டது. தேடுதலின்போது […]

பயங்கரவாதிகளின் தோற்றத்திற்கு பசில் ராஜபக்ஷவே முக்கிய காரணம்

அடிப்படைவாத அமைப்புக்களுக்கு ஆதரவாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் செயற்படுவதற்கான அதிகாரத்தை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பார்வையிட்டதைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பயங்கரவாதத்தை அரசியல் […]

தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளின் திட்டம் வெளியாகியது

பௌத்த பெண்கள் விகாரை செல்லும் ஆடைகளை அணிந்து சிங்கள பெண்கள் போன்று தற்கொலை தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளின் திட்டம் வெளியாகியது!!! சிங்கள பெண்கள் பௌத்த விகாரைகள் செல்லும் போது வெள்ளை நிற மேல்சட்டை மற்றும் நீளமான சட்டை அணிந்து செல்வது வழமை , இவர்களை போன்று இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பெண்கள் இதில் பெரும்பாலும் மதம்மாற்றப்பட்ட தமிழ் ,சிங்கள பெண்களை பயன்படுத்தி புத்தவிகாரைகளை தாக்கி இன்னும் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தி […]