Tag: படையினர்

யாழில் முஸ்லிம் குடும்பங்களுக்கு தானம் வழங்கிய படையினர்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரப் பகுதியில் வசிக்கும் 20 முஸ்லிம் குடும்பங்களுக்கு படையினரால் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. பொசன் பண்டிகையை முன்னிட்டு படையினர் குறித்த பொருட்களை வழங்கியுள்ளனர். யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியின் ஏற்பாட்டில் படை அதிகாரிகள் கலந்து கொண்டு இந்த உலர் உணவுப் பொருள்களை வழங்கிவைத்துள்ளனர்.

மின்விளக்குகளுடன் பறந்த பட்டத்தைப் பார்த்து வெருண்ட படையினர்

பொன்னாலையில் மின்னொளி பொருத்தப்பட்டு விண் பூட்டப்பட்டு ஏற்பட்ட பட்டத்தைக் கண்ட படையினர் அது ஆள் இல்லாத விமானம் எனக் கருதி சுட முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றது. அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் நேற்று மாலை பற்றரி பொருத்திய டோர்ச் லைற் ஒன்றை பட்டத்தில் பொருத்தி விண் பூட்டி வானத்தில் ஏற்றியிருந்தனர். இரவானதும் அதைக் கீழே இறக்காமல் அப்படியே கட்டிவிட்டு வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். நேற்றிரவு 11.00 […]

தொடர்ந்து கண்டி நிர்வாகப் பிரிவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது : இராணுவப் பேச்சாளர்

கண்டி மாவட்டத்தில் நிலவிய பதற்றமான சூழல் நேற்றுமுதல் ஓரளவு சாதாரண நிலைக்குத் திருப்புள்ள போதிலும் தொடர்;ந்து ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார் அவர் மேலும் தெரிவித்தாவது, கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த முப்படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்காக மேஜர் ஜெனரல் ருக்மன் […]