பங்களாதேஷ் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கூட்டு அரசாங்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தக் கூடிய- சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ள புதிய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார். பங்களாதேசுக்குப் புறப்படுவதற்கு முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் பலர், இந்த ஆண்டில் நடத்தப்படும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சி […]
Tag: பங்களாதேஷ்
பங்களாதேஷ் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி
பங்களாதேஷிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹஸீனா இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இரு தலைவர்களுக்குமிடையில் சுமுகமான கலந்துரையாடலை தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. இலங்கை மற்றும் பங்களாதேஷிற்கு இடையில் வர்த்தக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பிலும் விஷேட பொருளாதார வலயமொன்றை உருவாக்கிக் கொள்வது தொடர்பிலும் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
ஜுலை 13இல் பங்களாதேஷ் பறக்கின்றார் மைத்திரி!
பங்களாதேஷ் பிரதமர் ஷிக் ஹஸினாவின் அழைப்பையேற்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் எனவும், அந்த மாதம் 16ஆம் திகதிவரை அவர் அங்கு தங்கியிருப்பார் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்துக்கு பங்களாதேஷ் ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்களை நிவாரண உதவியாக வழங்கியிருந்தது எனவும், அந்த உதவியைத் தொடர்ந்து ஜனாதிபதியை தனது நாட்டுக்கு […]





