மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கிலேயே 20ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலை அரசு நிராகரித்தது. “மாகாண சபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதே ’20’இன் நோக்கம். மாறாக ஒத்திவைப்புக்கான நடவடிக்கை அல்ல” என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு […]
Tag: தயாசிறி ஜயசேகர
ரவிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை: தயாசிறி
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நிதியமைச்சராக ரவி கருணாநாயக்க கடமையாற்றிய காலத்தில், அவரது உறவினர்களுக்கு பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸ் சொகுசு வீடொன்றை பெற்றுக்கொடுத்து, வாடகையும் செலுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டு, தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு […]
அமைச்சரவை இணைப்பேச்சாளராக சு.கவின் சார்பில் தயாசிறி நியமனம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று புதன்கிழமை முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெறவுள்ளது. இதில் புதிய அமைச்சரவை இணைப்பேச்சாளர் தயாசிறி ஜயசேகரவும் பங்கேற்கவுள்ளார். அவரின் பங்குபற்றலை அரச தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளராக இருந்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க அந்தப் பதவியில் தொடர்ந்தும் […]
சு.கவின் அமைச்சரவை பேச்சாளராக தயாசிறியை நியமிக்க அனுமதி
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக அமைச்சரவை பேச்சாளராக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவை நியமிக்க கட்சியின் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோரின் அனுமதி கிடைக்கப்பட்டதன் பின்னர் தயாசிறி ஜயசேகரவின் பெயர் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழியப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கயந்த […]
பணிப்பகிஷ்காிப்பை அறிவித்துவிட்டு தனியார் வைத்தியசாலைகளில் பணிபுரிகின்றனர்: லக்ஷ்மன் கிரியெல்ல
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் வைத்தியர்கள் மாலை வேளையில் தனியார் வைத்தியசாலைகளில் அதிக கொடுப்பனவுக்கு பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்பதிவு முறையில் தனியார் வைத்தியசாலைகளில் அதிக கொடுப்பனவுக்கு வைத்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் […]





