அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்!” : துரைமுருகன் நம்பிக்கை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி என்றும், அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து, தண்டையார்பேட்டை திமுக தேர்தல் பணிமனையில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய […]
Tag: தமிழக
ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா வேட்புமனுவை வைத்து அஞ்சலி
ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா வேட்புமனுவை வைத்து அஞ்சலி ஆர்.கே.நகரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள தீபா, மெரினாவில் ஜெயலலிதா சமாதியின் மேல் வேட்புமனுவை வைத்து அஞ்சலி செலுத்தினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இந்நிலையில்ஆர்.கே.நகரில்’ பேரவை சார்பில் போட்டியிடும் தீபா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளனர். சசிகலா அணி வேட்பாளராக […]
சபாநாயகர் மீது தி.மு.க கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
சபாநாயகர் மீது தி.மு.க கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி! சபாநாயகர் தனபால் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம், குரல் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து எண்ணிக் கணிக்கும் முறையில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை, ரகசிய வாக்கெடுப்பாக நடத்தகோரி அன்றைய தினம் திமுக சட்டமன்ற […]
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உறவினர்கள் கோரிக்கை
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உறவினர்கள் கோரிக்கை இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட எட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, எட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். இதனையடுத்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கைது […]
தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக 2.096 கோடி வழங்க பரிந்துரை!
தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக 2,096 கோடி வழங்க பரிந்துரை! தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக 2,096 கோடி ரூபாய் நிதி வழங்க மத்திய குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 141 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலவிவருவதால் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய குழு ஆய்வு […]
தமிழக அரசியலில் விரைவில் பெரிய மாறுதல் வரும்: துரைமுருகன்
தமிழக அரசியலில் விரைவில் பெரிய மாறுதல் வரும்: துரைமுருகன் தமிழகத்தில் விரைவில் பெரிய மாறுதல் வரப்போகிறது. தமிழகத்தின் அரசியல் 25 ஆண்டுகள் தளபதி மு.க.ஸ்டாலின் கையில் இருக்கும் என்று துரைமுருகன் கூறியுள்ளார். சென்னை மேற்கு மாவட்டம் தியாகராய நகர் கிழக்கு மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் மறைந்த பழக்கடை கி.ஜெயராமன் 33-வது நினைவு நாள் மற்றும் இளைஞர் எழுச்சி நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் தி.நகரில் நடந்தது. கிழக்கு […]
மக்களாட்சியை அமல்படுத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – டாக்டர் கிருஷ்ணசாமி
மக்களாட்சியை அமல்படுத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – டாக்டர் கிருஷ்ணசாமி தமிழக சட்டப்பேரவையை கலைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். தமிழகத்தில் மக்களாட்சியை அமல்படுத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த […]
நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து புகார் – ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார் ஸ்டாலின்
நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து புகார் – ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார் ஸ்டாலின் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று (பிப்., 23) மாலை சந்திக்க உள்ளார். நேரில் வலியுறுத்தல்: தமிழக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை எதிர்கட்சி தலைவர் […]
தமிழக உளவுத் துறை ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம்
தமிழக உளவுத் துறை ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம் தமிழக உளவுத் துறை ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை நல்வாழ்வுத் துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, உளவுத் துறை ஐ.ஜி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். சமீபத்தில், தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற நிலையில், […]
தமிழக உள்ளாட்சித் தேர்தல் மே 14-ஆம் தேதிக்குள் முடிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவு
தமிழக உள்ளாட்சித் தேர்தல் மே 14-ஆம் தேதிக்குள் முடிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவு தமிழக உள்ளாட்சித் தேர்தல் மே 14-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வரும் மே மாதம் 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் […]





