Tag: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Maithripala Sirisena

ஜுலை 13இல் பங்களாதேஷ் பறக்கின்றார் மைத்திரி!

பங்களாதேஷ் பிரதமர் ஷிக் ஹஸினாவின் அழைப்பையேற்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் எனவும், அந்த மாதம் 16ஆம் திகதிவரை அவர் அங்கு தங்கியிருப்பார் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்துக்கு பங்களாதேஷ் ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்களை நிவாரண உதவியாக வழங்கியிருந்தது எனவும், அந்த உதவியைத் தொடர்ந்து ஜனாதிபதியை தனது நாட்டுக்கு […]

காணாமல்போன படையினர் குறித்தும் விசாரணை நடத்தப்படவேண்டுமாம்! – மஹிந்த அணியின் கோரிக்கை இது .

காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அலுவலகம் அமைக்கப்படுமாக இருந்தால் காணாமல்போன படையினர் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று மஹிந்த அணி கூறியுள்ளது. மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம அரசிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “நாம் இன்று யுத்தத்தையும், யுத்தத்தை வெற்றிகொண்ட மஹிந்த ராஜபக்ஷவையும் மறந்துவிட்டே பேசிக்கொண்டிருக்கின்றோம். இந்த அரசு இவ்வளவு தூரமேனும் பயணிக்கின்றது என்றால் அதற்குக் காரணம் யுத்தம் முடிவுக்குக் […]

வாக்குகளுக்காக அரசியல்வாதிகள் சுயநலம்; அதுவே அனர்த்தங்களுக்கு முக்கிய காரணம்! – சீறுகின்றார் மைத்திரி

“அரசியல்வாதிகள் அபிவிருத்திக்குப் பதிலாக விருப்பு வாக்குகளை எதிர்பார்த்துச் செயற்படுவதனாலேயே வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுக்கவேண்டியிருக்கின்றது.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அபிவிருத்தி செயற்பாடுகளின்போது அரசு விதந்துரைக்கும் திட்டங்களை அமுல்படுத்த இடமளிக்காமல் அடுத்த தேர்தலுக்காக மக்களை வெற்றிகொள்வதற்கு அரசியல்வாதிகள் சிலர் செயற்படுவதன் காரணமாக இவ்வாறான அழிவுகளுக்கு மக்கள் முகங்கொடுக்கவேண்டியிருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான கசப்பான அனுபவங்களுக்கு பின்னராவது மக்களுக்கு உண்மை நிலையைப் புரியவைத்து அரசின் […]

நாளை அவுஸ்ரேலியா பறக்கிறார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை செவ்வாய்க்கிழமை அவுஸ்ரேலியாவுக்கு அரசுமுறைப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இலங்கை ஜனாதிபதி ஒருவர், அவுஸ்ரேலியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். நாளை பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக அவுஸ்ரேலியா செல்லும் ஜனாதிபதி முதலில் கன்பரா செல்வார். நாளைமறுதினம் 24ஆம்திகதி கன்பரா சென்றடையும் அவர், அவுஸ்ரேலியத் தலைவர்களைச் சந்தித்து விட்டு இரவு அங்கு தங்குவார். அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் ரேன்புல் மற்றும் […]

இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற முடியாது : ஜனாதிபதி திட்டவட்டம்

இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பில் அமைச்சர்கள், சட்டமா அதிபர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். குறித்த சந்திப்பில் காணாமல் போனோர் தொடர்பாகவும், இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பாகவும், […]

ஜனாதிபதி தலைமையில் அடுத்தமுறை கூடுவது புதிய அமைச்சரவையாகவே இருக்கும் என எதிர்பார்ப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அடுத்தபடியாக நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டம் அநேகமாக மீளாய்வு செய்யப்பட்ட அமைச்சரவையாக இருக்கலாம் என அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளளன. அமைச்சரவைக் கூட்டமொன்று நடந்து முடிந்ததும் அடுத்த கூட்டத்துக்கான திகதியும் நேரமும் அறிவிக்கப்படுவது சம்பிரதாயமாகும். எனினும், இறுதியாக நடந்த கூட்டத்தில் அடுத்த கூட்டத்துக்கான திகதியும் நேரமும் அறிவிக்கப்படாததால் அடுத்த கூட்டம் அநேகமாக மாற்றம் செய்யப்பட்ட அமைச்சரவையின் கூட்டமாக இருக்கலாம் என அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 19ஆவது அரசமைப்புத் […]

மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானிப் பிரகடனம் தொடர்பிலான ஜனாதிபதியின் சந்திப்பில் திருப்பம்

மறிச்சுக்கட்டி, மாவில்லு குறித்து புதிய வர்த்தமானியில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படும் தவறுகளை திருத்துவது தொடர்பாக உயர்மட்ட மாநாடு ஒன்று எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் இந்த மாநாடு கூட்டப்படவுள்ளது என முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், முசலியில் முஸ்லிம்களுக்குரிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் ஜனாதிபதியினால் வனப்பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது. […]

நவீன லேசர் வெசாக் அலங்காரப் பந்தல் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது

உலகிலுள்ள முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தல் மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. கொழும்பு காலிமுகதிடலில் நிர்மாணிக்கப்படுகின்ற இவ்வலங்காரப் பந்தல் நாளை மறுதினம் (புதன்கிழமை) மாலை 7.00 மணிக்கு முதன் முறையாக காட்சிபடுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை எதிர்வரும் 14ஆம் திகதி மக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்படும் இந்த வெசாக் அலங்கார பந்தல், கொலந்தொட்ட வெசாக் வலயத்திற்கு இணையாகவே இந்நவீன இவ்வெசாக் அலங்கார […]

தலதா மாளிகைக்கும் செல்கின்றார் மோடி!

இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கண்டி தலதா மாளிகைக்குச் சென்று மதவழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தினக் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு எதிர்வரும் 11 ஆம் திகதி இந்திய பிரதமர் மோடி கொழும்பு வரவுள்ளார். இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஹட்டன், கிளங்டன் வைத்தியசாலையை 12ஆம் திகதி மோடி திறந்துவைக்கவுள்ளார். மலையக பயணத்தின்போதே அவர் தலதா மாளிக்கைக்கும் செல்லவுள்ளார். […]

அமைச்சரவையில் பேசப்படும் விடயங்கள் தொடர்பில் பொறுப்புடன் பேசுங்கள்: ஜனாதிபதி

அமைச்சரவையில் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் அவற்றைப் பொது இடங்களில் பேசும்போது பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சரத் பொன்சேகாவுக்கு கூட்டுப் படைகளின் தளபதியாக நியமிப்பது தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை. அவரை அத்தியாவசிய சேவையை முன்னெடுக்கும் செயலணிக்குப் பொறுப்பாக நியமிப்பது […]