கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்குழு நேற்று ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தரப்புடன் பேச்சுக்களில் ஈடுபட்டது. கேப்பாபிலவுக் காணிகளை விடுவிப்பதற்காக இராணுவத்தினருக்கு 14 கோடி 80 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கூட்டத்தில் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு நேற்று மாலை 4.30 மணி தொடக்கம் சுமார் ஒரு மணி நேரம் நாடாளுமன்றக் […]
Tag: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
எனது ஆசிர்வாதமின்றி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அரசமைப்பின் பிரகாரம் முடியாது
எனது ஆசிர்வாதமின்றி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அரசமைப்பின் பிரகாரம் முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஹிங்குராக்கொட இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். நாடாளுமன்றத்தை 113 ஆசனங்களை கைப்பற்றினால் ஆட்சியை பிடித்துவிடலாம். அதன்பின்னர் ஜனாதிபதியினதும், அரசினதும் ஆட்டம் முடிவடைந்துவிடும் என கூட்டு எதிரணி கூறிவருகிறது. அது வெறும் கனவு மாத்திரமே. நாட்டின் முன்னேற்றத்துக்கான தடைகளை அகற்றி, தற்போதைய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. எனினும், […]
இளஞ்செழியனுடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடல்
யாழ்ப்பாண பிரதான நீதவான் நீதிமன்றின் நீதிபதி இளஞ்செழியனுடன் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இடம்பெற்ற சம்பவத்திற்கு கவலை வெளியிட்டுள்ளார். யாழ். நல்லூர் பின்வீதியில் நேற்றைய தினம் நீதிபதி இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரின் சடலம் தற்பொழுது சிலாபத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. சடலம் மாங்குளம் பகுதியில் கொண்டு செல்லப்பட்ட நிலையில், நீதிபதி இளஞ்செழியனுக்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, […]
அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தகர்த்தெறிய மஹிந்த இராஜதந்திர வியூகம்!
புதிய அரசமைப்பை தேசிய அரசு கொண்டுவருவதைத் தடுக்கும்வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் இராஜதந்திர வியூகங்களை வகுத்து நாட்டில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றில் தேசிய அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை உடைத்தெறிவதே இவர்களின் தற்போதைய பிரதான இலக்காகவுள்ளது எனவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. 2015ஆம் ஆண்டு பொது வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டபோது புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவருவதும், தேர்தல் முறைமையை மறுசீரமைப்பதுமே […]
ஜனாதிபதி- பிரதமரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், போலி ஆவணங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றன. இந்த வழக்கில் முதலாம் மற்றும் இரண்டாவது சாட்சியாளர்களாக ஜனாதிபதியும், பிரதமரும் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் […]
தெருவில் காத்திருந்த சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மைத்திரி
தெருவில் காத்திருந்த சிறுமிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ள சம்மாவாம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. நிகழ்விற்கு நேற்று சென்று கொண்டிருக்கும் போது அஸ்கிரிய மைதானத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசிக்கும் சிறுமி ஒருவர் வீதி அருகே வந்து ஜனாதிபதி செல்லும் வாகனங்களை நோக்கி பார்வையிட்டுள்ளார். ஜனாதிபதி தனது […]
மஹிந்தவின் ஆட்சிக்கு மீண்டும் இடம் இல்லை – மைத்திரி திட்டவட்டம்
“2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இந்த நாட்டிலிருந்து ஏகாதிபத்திய ஆட்சிக்கு நான் முடிவுகட்டினேன். அத்தகைய ஆட்சிக்கு இந்த நாட்டில் மீண்டும் இடம் கிடையாது.” இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. ”முகமூடியைப் போட்டுக்கொண்டு மக்களுக்கு அழகானதொரு உலகைக் காட்டி மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு சிலர் (மஹிந்த தரப்பினர்) மேற்கொண்டுவரும் சதித்திட்டங்கள் குறித்து இன்று நாட்டு மக்கள் தெளிவுடன் இருக்கின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டார். கல்கமுவ பிரதேசத்தில் […]
அமெரிக்காவுடனான உறவு வலுப்பெற்றுள்ளது: ஜனாதிபதி மைத்திரி
இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா இன்று (செவ்வாய்க்கிழமை) தமது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் உத்வேகம் பெறும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்ட காலத்திற்கு முன்பிருந்தே அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு […]
ஜனாதிபதி செயலாளராக ஒஸ்டின் பதவிப்பிரமாணம்
ஜனாதிபதியின் செயலாளராக, இலங்கையின் மூத்த அரச உத்தியோகத்தர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புதிய செயலாளரின் பணி, அரச சேவைக்கு பலம் சேர்க்கும் வகையில் அமையுமென ஜனாதிபதி தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளராக பதவி வகித்து வந்து பீ.பி.அபேகோன் கடந்த மாதம் 30ஆம் திகதி […]
இறுதிக்கட்ட போரில் படையினரிடம் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிட ஜனாதிபதி உத்தரவு
இறுதிக்கட்ட போரில் படையினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும், படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு முப்படையினர் மற்றும் காவல்துறையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டளை பிறப்பித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் நேற்று மாலை 4 மணியளவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியல் மற்றும் […]





