ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் சுமந்திரன்? இலங்கை சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கு இன்னும் 48 நாட்களே உள்ளன. இந்த தேர்தலில் மூன்று குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். அவர்கள் கணிசமான வாக்குகளைப் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷ 40 + சதவீத வாக்குகளையும், சஜித் பிரேமதாச 40 + […]
Tag: சுமந்திரன்
ரணிலின் திருகுதாளங்களை போட்டுடைத்தார்: சுமந்திரன்
வரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகளில் போதியளவு உண்மைத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் இல்லை, தரவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது மிகப்பெரும் குறைபாடாக இருக்கின்றது என்கிறார் எம்.ஏ.சுமந்திரன். இவ்விடயம் தொடர்பில் எமது குழு அறிக்கையைத் தயாரிப்பதற்குத் தேவையான தகவல்களைக் கோரியிருந்த போதிலும் நிதியமைச்சு அதற்கு ஒத்துழைக்கவில்லை. தகவல்களை வழங்குவதற்கு அவர்கள் தாமதித்தமையின் காரணமாகவே நாங்கள் அறிக்கை சமர்ப்பிப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன், எம்முடைய குழு […]
தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் சுமந்திரன்
புதிய அரசியலமைப்பின் சட்டமூலம் எதிர்வரும் பெப்ரவரியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுவதாக தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை. தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையையே சுமந்திரன் மேற்கொண்டுவருகின்றார். இவரின் நடவடிக்கைகள் பிரபாகரன் மேற்கொண்டுவந்த பிரசாரங்களையும் விட ஆபத்தானது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்லேயே இவ்வாறு […]
சுமந்திரன் விரைவில் கைது!! ஜனாதிபதி மைத்திரி அதிரடி
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.எ சுமந்திரன் அவர்களை கைது செய்வதற்குறிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் பாதுக்காப்பு பிரிவு மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதியின் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மேலும் அறியவருவதாவது… நேற்றைய தினம் வவுனியா நகரமண்டபத்தில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்ட சுமந்திரன் அவர்கள் உரையாற்றும் பொழுது இலங்கை சோசலிச குடியரசின் […]
கடுமையான நிலைப்பாட்டை எடுக்குமாறு அமெரிக்காவிடம் கோரினோம்- சுமந்திரன்
ஜெனிவாவில் இன்றைய சிறிலங்கா தொடர்பான அமர்வின் போது, அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று, அமெரிக்காவிடம் வலியுறுத்தியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பதில் பிரதித் தூதுவர் கெல்லி கியூரியையும் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது, பொறுப்புக்கூறல் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் […]
குற்றவாளிகளை காப்பாற்றும் வடக்கு முதல்வரின் தீர்மானத்தை ஏற்க முடியாது: சுமந்திரன்
வடக்கு முதல்வர் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்தமையாலேயே அவருக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக தமிழரசு கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு முதல்வர் சி.வி.க்கு எதிராக தமிழரசு கட்சியினரால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கையில் இரு அமைச்சர்கள் மட்டுமே குற்றவாளிகள் எனவும் ஏனைய […]
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அயராது பாடுபட்டவர் விநாயகமூர்த்தி! – இரங்கல் செய்தியில் சுமந்திரன் தெரிவிப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் மறைவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளது. இவர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அயராது பாடுபட்டவர் என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “அப்பாத்துரை விநாயகமூர்த்தி நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயலாற்றியவர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மிகச் சிறப்பாகச் […]
ஸ்ரீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றவே கால அவகாசம் – கஜேந்திரகுமார்
ஸ்ரீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றவே கால அவகாசம் – கஜேந்திரகுமார் சுமந்திரன் போன்றவர்கள் ஸ்ரீலங்காவிற்கு கால அவகாசத்தை வழங்க வேண்டும் எனக் கோருவது அரசாங்கத்தைக் காப்பாற்றும் நோக்கமே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு நீதி கோருகின்ற நோக்கத்தோடு, முன்வைக்கின்ற கருத்தாக இருக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 7 ஆவது […]





