Tag: சசிகலா

ஜெயலலிதா மர்ம மரணம் ?

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி சுமார் 75 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு சார்பில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தற்போது விசாரணையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன்படி, ஜெயலலிதாவின் […]

ஜெயலலிதாவின் அண்ணன் மகள்

ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் ?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் சசிகலா குடும்பத்தின் மீது சந்தேகம் இருப்பதாகவும், ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவரது அண்ணன் மகள் தீபா விசாரணை ஆணையத்திடம் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் மட்டுமே அவரோடு இருந்தனர். அவர் சிகிச்சை பெற்ற எந்த […]

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மீதும் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் – மு.க.ஸ்டாலின்

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் இருவர் மீதும் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவொற்றியூரில் மீனவர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஆர்.கே.நகர் தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுவது பாராட்டுக்குரியது. நாம் ஒருசிலரை மாற்றச் சொன்னோம். அவர்கள் 30 பேரை மாற்றி உள்ளனர். இது நமக்கு கிடைத்த முதல் வெற்றி. முறையாக தேர்தல் நடக்க வேண்டும். இந்திய தேர்தல் […]

ஜெயலலிதா சிகிச்சை

ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வீதிவீதியாக தீவிர பிரச்சாரம்

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் ஆர்.கே.நகர் தொகுதியில் தன்னுடைய வெற்றி இருக்கும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி.தினகரன் மூன்றாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ஏராளமான பொதுமக்கள் திரண்டு, அவருக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக […]

சசிகலா பொதுச் செயலாளர் பதவி தேர்தல் - ஓ.பி.எஸ். அணி

மதுசூதனன் வெற்றி உறுதி: ஓ.பி.எஸ்.

ஆர்.கே. நகரில் மதுசூதனன் வெற்றி உறுதியாகி உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் மகத்தான வெற்றி பெறுவார். தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம். தேர்தலை ஆணையம் முறையாக நடத்த வேண்டும். இரட்டை மின்விளக்கில் ஒரு விளக்கு எம்ஜிஆர். மற்றொன்று ஜெயலலிதா. […]

இடைத்தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையம்

ஆர்.கே. நகர்; வேட்பாளர்களின் சொத்து விபரம்

ஆர்.கே. நகரில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இடைத்தேர்தல் நடைபெற உள்ள, ஆர்.கே.நகர் தொகுதியில், நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம், 114 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள், இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. தேர்தலில் போட்டியிட ‘அ.தி.மு.க., அம்மா’ சார்பில் சசி அக்காள் மகன் தினகரன், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன், தி.மு.க., சார்பில் மருத கணேஷ், பா.ஜ., சார்பில் […]

இடைத்தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையம்

ஆர்.கே.நகர் விவகாரம் ; தேர்தல் அதிகாரியிடம் 31 பேர் நேரில் மனு

ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் ஒரே நாளில் 31 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். நேற்று ஒரே நாளில் மட்டும் 31 பேர், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை ஆர்.கே.நகரில் போட்டியிட 55 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சசிகலா அணியின் டிடிவி […]

உச்சங்கிளையில் ஊசலாடும் உட்கட்சி பிரிவுகள்

உச்சங்கிளையில் ஊசலாடும் உட்கட்சி பிரிவுகள் !! சின்னம் யாருக்கு… விசாரணையில் இழுபறி

உச்சங்கிளையில் ஊசலாடும் உட்கட்சி பிரிவுகள் !! சின்னம் யாருக்கு… விசாரணையில் இழுபறி இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா, பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளாக பிரிந்துள்ளன. அதிமுக-வின் அதிகாரப்பூர்வ சின்னமாக இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் முயற்சியில் இரு அணிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதிமுகவின் இருதரப்பும் தங்களுக்கே இரட்டை இலைச்சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று […]

சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை

சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக கடந்த டிசம்பர் 29-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அவரது தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பிறகு அவர் 31-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு வந்து பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றார். இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி முதல்- […]

அரசுப் பணிகள் - சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள்

அரசுப் பணிகள் விட்டுவிட்டு அரசு பொறுப்பில் இல்லாத சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள்

அரசுப் பணிகள் விட்டுவிட்டு அரசு பொறுப்பில் இல்லாத சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள் சிறையில் இருக்கும் சசிகலாவை தமிழக அமைச்சர்கள் இன்று சந்தித்து பேசினர். சென்னையில் ஏராளமான அரசுப் பணிகள் இருக்கும்போது, அவற்றை விட்டுவிட்டு, அரசு பொறுப்பில் இல்லாத சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்தது விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையில் சசி அடைக்கப்பட்டுள்ளார். இவரை சமீபத்தில் தினகரன் சந்தித்து வந்தார். இந்நிலையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் […]