இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தனர் மத தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றனர் என்ற காரணங்களை கூறி சிங்கள மக்கள் கின்னியம மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலை தகர்த்தனர். மேலும்… குருநாகல்- பூவெல்ல பிரதேச தக்கியாவும் சிங்கள மக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இஸ்லாமியர்களின் புனித நூல்களும் எரியூட்டப்பட்டது. மேலும் வன்முறை தொடராதிருக்க இலங்கை அரசாங்கம் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளது. எனினும் எந்த பள்ளிவாசல் எப்போது தாக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுவதாக அங்கிருக்கும் நபர்கள் கூறுகின்றனர். […]
Tag: கொழும்பு
கொழும்பு அந்தோனியர் ஆலயத்தில் அருகில் காத்திருந்த பேராபத்து…
கொழும்பு- கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இரண்டு குண்டு வெடிப்புக்களை நடாத்த திட்டமிட்டிருந்ததாக பாதுகாப்பு தரப்பினா் நடாத்திய விசாரணைகளின் மூலம் தொியவந்துள்ளது.கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதன் பின்னா் ஆலயத்திலிருந்து 100 மீற்றா் துாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றை சோதனையிட்ட இராணுவத்தினா் மற்றும் விசேட அதிரடிப்படையில்குறித்த வாகனத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த ஆபத்தான குண்டு ஒன்றை வெடிக்கவைத்திருந்தனா். குறித்த வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இந்த வான் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து […]
கொழும்பு பள்ளிவாசலுக்குள் பரபரப்பை ஏற்படுத்தய சம்பவம்!
கொழும்பு கொம்பனித் தெருவில் பள்ளிவாசலுக்குள்ளிருந்து 47 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. பள்ளி வீதி பகுதியிலுள்ள பள்ளிவாசலில் இருந்தே வாள்கள் மீட்கப்பட்டன. பள்ளியின் மதகுருவின் படுக்கைக்கு கீழே வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் இராணுவ பயன்பாட்டிற்குரிய ஆடைகளும் மீட்கப்பட்டிருந்தன. மதகுரு தற்பொழுது விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இச்சம்பவத்தால் படைத் தரப்பு செய்வதறியாது தடுமாறுவதாக கூறப்படுகிறது.
நடு வீதியில் திடீரென பற்றி யெரிந்த முச்சக்கர வண்டி
முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவமொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு 7 தாமரைத்தடாகத்திற்கு அருகிலுள்ள வீதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு அரசியலில் தொடரும் குழப்பம்!
சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலோ அல்லது சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி சார்பிலோ அரச தலைவர் வேட்பாளர் தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை. இரு கட்சிகளும் இது தொடர்பில் பேச்சு நடத்துகின்றனர். அந்தப் பேச்சு சுமுகமாகப் போகின்றது. இறுதியில் தீர்க்கமான முடிவெடுக்கப்படும். இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தடாலடியாக நேற்றுத் தெரிவித்திருக்கின்றார். அரச தலைவர் வேட்பாளராக கோத்தபாய களமிறங்குவார் என்று அதற்கு மகிந்த ராஜபக்ச இணங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் மைத்திரிபால […]
மனிய உரிமை மீறல் குற்றங்களுக்காக கொழும்பு மீது பன்னாட்டு விசாரணை!!
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதை உறுதிப்படுத்துவதற்காக அதன் மீது உலக சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் வகையிலான (அதாவது பன்னாட்டு நீதி விசாரணை போன்ற ஒன்று) தெரிவுகள் உட்பட மாற்று வழிகளை உலக நாடுகள் ஆராய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹூசைன். இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில் கொழும்பு […]
சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார்
சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார் என்று நமல் ராஜபக்சே கூறியிள்ளார். ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார். இலங்கை தமிழர்கள் மீது சீமானுக்கு உண்மையில் அக்கறையில்லை. தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் சீமான் எழுப்பிய கேள்விக்கு நமல் ராஜபக்சே டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.
கொழும்பிலும் வெடித்தது போராட்டம்!
கொழும்பிலும் வெடித்தது போராட்டம்! சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பதில் கூறவேண்டும், பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட சகல அடக்குமுறை சட்டங்களும் இரத்துச் செய்யப்பட வேண்டும், இராணுத்தினர் வசப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஒருவாரகால தொடர் போராட்டம் கொழும்பில் இன்று ஆரம்பமானது. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாடில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் […]





