தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து கலந்து பேசித் தீர்ப்பதற்காக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இந்த வார இறுதியில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப் பட்ட போதிலும் இதுவரை அந்தச் சந்திப்புக்கான ஒழுங்குகள் இறுதிசெய்யப்பட வில்லை. இருவருக்கும் பொதுவான நண்பரான ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனின் பங்கு பற்றுதலுடன் இந்தச் சந்திப்பு நடைபெறுகின்றமையை சம்பந்தன் விரும்புகின்றார் எனக் கூறப்படுகின்றது. சட்டத்தரணி […]





