Tag: கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை

பரீட்சைக்கு தோற்றச்சென்ற இரு மாணவர்கள் கைது !

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காகச் சென்ற இரு மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதுளை, லுனுகலை பகுதியில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு மாணவர்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இரு மாணவர்களும் போலி ஆவணங்களுடன் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் இருவரும் 17 மற்றும் 18 வயதுடையவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் […]

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியீடு

2016 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை நாளை (28) வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் நாளை பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்புகுமார குறிப்பிட்டார். 2016 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக சுமார் ஏழு இலட்சம் மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.