மாநிலங்களில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நடக்கும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அரசியல் கொள்கைகள், கருத்துகள் பேசக்கூடாது என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்லூரிகள் நடத்தும் விழாக்கள், நிகழ்ச்சிகளில் பங்குபெறும் சிறப்பு அழைப்பாளர்கள் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சி அல்லது இயக்கங்களின் கொள்கைகளை தங்களின் உரைகளில் கலந்து பேசுவதாக தெரியவருவதாகவும், இது போன்ற நிகழ்வுகள் கல்வி கற்கும் மாணாக்கர்களுக்கு இடையூறாக அமையும் […]





