அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதையடுத்து, கூட்டு எதிரணியின் முக்கிய பங்காளிக் கட்சியான விமல் வீரவன்ச தலைமையிலான, தேசிய சுதந்திர முன்னணி அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகியுள்ளது. தமது கட்சியைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளில் இருந்து வெளியேறுவதாக, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், விமல் வீரவன்ச நேற்று கடிதத்தைக் கையளித்தார். அதேவேளை,மகிந்த ராஜபக்ச தலைமையிலான […]
Tag: அரசியலமைப்பு
வட.கிழக்கு மீளிணைப்பை தமிழர்கள் கைவிட்டுவிட்டனர்: ஐக்கிய தேசியக் கட்சி
வட.கிழக்கு மீளிணைப்பை தமிழர்கள் கைவிட்டுவிட்டனர்: ஐக்கிய தேசியக் கட்சி புதிய அரசியலமைப்பினை மக்கள் கருத்துக் கணிப்பிற்கு செலுத்தக்கூடாது என்று நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான இரண்டு கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துவரும் நிலையில் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்புப் பணிகள் உருவாக்கம் தொடர்பான இன்னும் யோசனையே பெற்று வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது. […]
ஒற்றையாட்சியில் கடுகளவும் மாற்றமில்லை: எஸ்.பி.திஸாநாயக்க
ஒற்றையாட்சியில் கடுகளவும் மாற்றமில்லை: எஸ்.பி.திஸாநாயக்க அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பேச்சுநடத்தி வருகின்றதெனவும் புதிய அரசியலமைப்பு குறித்து பேசப்படவில்லையென்றும் தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, அரசியலமைப்பு திருத்தத்தின் போது ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டில் கடுகளவும் மாற்றம் செய்யப்பட மாட்டாதென தெரிவித்துள்ளார். தமது அமைச்சின் காரியாலயத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்தோடு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் முழுமையாக நீக்கப்பட மாட்டாதென […]





