வடக்கில் எதற்கெடுத்தாலும் ‘புலி’ எனப் பொய்ப்பிரசாரம்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வடக்கு சமூகத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளைக் காரணங்காட்டி எதற்கெடுத்தாலும் புலிகள் மீளத் தோற்றம் பெறுகின்றனர் எனப் பொய்ப்பிரசாரத்தை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன விசனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர்,

தேர்தல்களைப் பிற்போடும் எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை. மாகாண சபைத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தவேண்டும் என்றே கூறுகின்றோம்.

தேர்தலைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிற்போட நடவடிக்கை எடுத்துவருவதாக தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

சு.கவுக்கு தேர்தலைப் பிற்போடவேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை. மாகாண சபைத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துமாறே தெரிவிக்கின்றோம்.

தேர்தலை ஒரே தினத்தில் வையுங்கள் என்று சுதந்திரக் கட்சி கூறுவது இறுதியாக கால எல்லை முடிவடையும் ஊவா மாகாண சபை கலைக்கப்படும் வரை இருக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை.

விரைவில் அதாவது, 2018இல் ஒரே தினத்தில் தேர்தலை வைப்பதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

மாறி மாறி கடந்த காலங்களில் விருப்பு வாக்குமுறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டமையால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து அனைவரும் அறிவோம். நாட்டின்

சொத்துகள்முதல் கோடிக்கணக்கான பணங்கள் செலவிடப்பட்டன.

ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவதன்மூலம் தேர்தல் செலவும் குறைவடையும். தேர்தல் ஆணையாளர், ஆளுநர்கள், மாகாண முதலமைச்சர்களுக்கு இணக்கம் என்றால் ஒரே தினத்தில் தேர்தலை நடத்தமுடியும்.

வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாண சபைகளில் சு.கவின் முதலமைச்சர்களே உள்ளதால் இந்த விடயத்தைப் பேசி ஓர் இணக்கப்பாட்டுக்கு வரமுடியும்.

தேர்தலைப் பிற்போடுவது எமது இலக்கல்ல. தேர்தல் முறை மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்களை வாக்குறுதிகளாகக் கொடுத்தே மக்களிடம் வாக்குகளைப் பெற்றோம்.

சு.க. தேசிய அரசில் இணையாவிடின் இன்று பிணைமுறி மோசடியை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டிருக்குமா? அரசின் அமைச்சர் ஒருவரை விசாரணை செய்யக்கூடிய சாத்தியம் கடந்த ஆட்சியில் இருந்ததா?

இன்று வடக்கில் எந்தவொரு பிரச்சினை நடந்தாலும் விடுதலைப்புலிகள் என்கின்றனர். ஆவா குழு பற்றிப் பேசுகின்றனர். சமூகத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளைக்

காரணங்காட்டி எதற்கெடுத்தாலும் புலிகள் மீளத் தோற்றம் பெறுகின்றனர் எனப் பொய்ப்பிரசாரத்தை மேற்கொள்கின்றனர்.

இந்த நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாத வகையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

விசேட நீதிமன்றத்தை அமைக்கப்போகின்றனர் எனவும் கூறினர். அவ்வாறு அமைக்கப்பட்டதா? தேசிய அரசில் இரண்டு கட்சிகள் உள்ளதால் மாறுபட்ட கருத்துகள் இருக்கும்.

இரண்டு கட்சிகளும் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயற்படுகின்றோம். சு.கவின் 66ஆவது மாநாட்டை சக்திமயப்படுத்த ஜனாதிபதியுடன் அனைவரும் கைகோத்து செயற்படவேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன விசனம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *