ஏழு இந்திய மீனவர்கள் கைது!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கச்சதீவு பகுதியை அண்மித்த நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்கள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஏழு இந்திய மீனவர்களுடன் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடற்படையினரால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் யாழ். கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுள்ளனர்.

மீனவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *