கோதுமை மா விலையில் மாற்றம்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
கோதுமை மா விலையில் மாற்றம்!

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கோதுமை மா விலை உயர்வினை பிறிமா நிறுவனம் திரும்பப்பெற முடிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சில்லறை வர்த்தகர்களுக்கு விலை மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிறிமா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 16 ஆம் திகதி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்dஇருந்தது.

இதன் காரணமாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கமும் 450 கிராம் பாணொன்றின் விலையை நேற்றுமுன்தினம் நள்ளிரவு 5 ரூபாவினால் அதிகரித்தது.

எனினும் இந்த அறிவிப்பினை அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நேற்றிரவு திரும்பப் பெற்ற நிலையில் இன்றைய தினம் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு தொடர்பான விலையை பிறிமா நிறுவனம் திரும்ப பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil Technology News

 

Tamilnadu News