பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுமா? – நீதியமைச்சர் கருத்து

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை முற்றாக நீக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அரசாங்கத்தினதும் நாட்டினதும் பாதுகாப்பிற்கு பாதகமான சட்டம் ஒருபோதும் அமுல்படுத்தப்பட மாட்டாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அமைச்சர், பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குவதற்கான முன்னெடுப்புக்கள் உத்தேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்த சட்டத்தினை முற்றாக நீக்கிவிட்டோ அல்லது மாற்றங்கள் செய்தோ அரசாங்கத்தினதும், நாட்டினதும் பாதுகாப்பிற்கு பாதகமான ஒரு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று நாம் ஒருபோதும் சிந்திக்கவில்லை.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *