வவுனியா மாவட்டத்தில் வீடற்றவர்களாக 11680 குடும்பங்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வவுனியா மாவட்டத்தில் 11 ஆயிரத்து 680 குடும்பங்கள் வீடுகள் அற்றவர்களாகவும் 4 ஆயிரத்து 620 குடும்பங்கள் மலசலகூட வசதியின்றியும் உள்ளனர் என வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கில் பல்வேறு தொழிற்சாலைகள் புனரமைப்பு செய்து, மீள ஆரம்பிக்க முடியாத சூழ்நிலையில், மட்டக்களப்பில் மதுபான தொழிற்சாலை நிர்மாணிக்கப்படுவது கண்டனத்திற்குரிய விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வன்னி மாவட்டத்தில் இருந்து இரவு பகலாக மாடுகள் கடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *