முடிவின்றேல் தனிவழி! ஐக்கிய தேசியக் கட்சி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
முடிவின்றேல் தனிவழி! ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிற்பகல் 04 மணிக்கு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் செயற்குழு இன்று கூடவுள்ளது.

இதனை கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள கூட்டணி தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

கூட்டணியின் பொதுச்செயலாளராக பெயரிடப்பட்டுள்ள ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு இன்றைய செயற்குழு கூட்டத்தில் அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 30ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இறுதியாக கூடியிருந்தது.

அதனையடுத்து, 06ஆம் திகதி கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதும், பின்னர் இரத்துச்செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News