ஒற்றையாட்சியில் கடுகளவும் மாற்றமில்லை: எஸ்.பி.திஸாநாயக்க

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
ஒற்றையாட்சியில் கடுகளவும் மாற்றமில்லை: எஸ்.பி.திஸாநாயக்க

அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பேச்சுநடத்தி வருகின்றதெனவும் புதிய அரசியலமைப்பு குறித்து பேசப்படவில்லையென்றும் தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, அரசியலமைப்பு திருத்தத்தின் போது ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டில் கடுகளவும் மாற்றம் செய்யப்பட மாட்டாதென தெரிவித்துள்ளார்.

தமது அமைச்சின் காரியாலயத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் முழுமையாக நீக்கப்பட மாட்டாதென குறிப்பிட்ட அமைச்சர் எஸ்.பி., அரசியலமைப்பு திருத்தச் செயற்பாடுகளின் போது சர்வஜன வாக்கெடுப்பிற்குச் செல்லும் வகையில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites