போராட்டத்திற்கு உரிய தீர்வு இன்றேல் வீச்சு அதிகரிக்கும் : கேப்பாபுலவில் துரைராசா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சொந்த நிலங்களிற்கு செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர் போராட்டத்திற்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிடின் போராட்டத்தின் வீச்சு அதிகரிக்கும் என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

கேப்பாபுலவு மக்களை நேற்றையதினம் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்றுடன் இருபத்தேழாவது நாளை எட்டியுள்ளது.

138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தை கடந்த முதலாம் திகதி முதல் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடாத தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *