திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு ஜப்பான் நன்கொடை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு ஜப்பான் 1தசம் 3 பில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.

திட்டமில்லா கொடை உதவித் திட்டத்தின் கீழ் இந்த நிதியை ஜப்பான் வழங்கவுள்ளது.

திருகோணமலை துறைமுகத்தையும், துறைமுகத்தின் கடல்சார் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கும், துறைமுகத்தின் வழிகாட்டல் முறையை அபிவிருத்தி செய்வதற்குமான ஜப்பானிய உற்பத்திகளை இந்த கொடையின் மூலம் பெற முடியும்.

இக்கொடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு ஸ்ரீலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜப்பானிய அரசாங்கத்துடன் இந்தக் கொடைகளை வழங்குவது தொடர்பான உடன்பாட்டில் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கையெழுத்திடவுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்படவுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *