ஒத்துழைப்பு வழங்கிய பொலிஸாருக்கு கூட்டு எதிரணி நன்றி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கூட்டு எதிரணியின் மே தின கூட்டத்திற்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பு வழங்கிய பொலிஸாருக்கு அந்த கட்சி நன்றி தெரிவித்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மே தின கூட்டம் தொடர்பில் இன்று கூட்டு எதிரணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இவ்வாறு குறிப்பிட்டார்.

கூட்டு எதிரணியால் முன்னெடுக்கப்பட்ட இந்த கூட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் உதவிகளை வழங்கி இருந்ததாகவும் குறிப்பாக பொலிஸார் எந்த தயக்கமும் இன்றி உதவி புரிந்ததாகவும் அதற்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

நேற்றைய கூட்டத்திற்கு எதிர்பாராத விதமான நாடுபூராகவும் இருந்து மக்கள் வருகை தந்திருந்த மக்களுக்கு மாற்று வீதிகளை வழங்கி உதவி புரிந்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *