ஐ.தே.கவின் வேட்பாளர் முடிவானது? ரணில்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஐ.தே.கவின் வேட்பாளர் முடிவானது? ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்தார்.

கண்டிக்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனைக் கூறினார்.

கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் அடுத்தவாரம் வேட்பாளர் நியமனம் இடம்பெறும் என்றும் அதனை கட்சியின் மூத்த உறுப்பினரான சபாநாயகர் கரு ஜயசூரிய உறுதிப்படுத்துவார் எனவும் அவர் கூறினார்.

ஐ.தே.கவின் வேட்பாளராக சஜித்: ரணில் இணக்கம்?

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு அமைச்சருமான சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படவுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள கட்சித் தலைவர்களும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நடத்திய கலந்துரையாடல்களின்போது இந்த இணக்கம் வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் விசேட சந்திப்பு ஒன்றை பிரதமர் ரணில் ஏற்பாடு செய்திருக்கின்றார்.

சில வேளை ரணிலை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

கூட்டம் முடிந்த பின்னரே உண்மையான அறிவிப்பு வெளிவரும்…

 

Tamil News

 

 

 

 

Technology News

 

 

 

 

World Newspapers