நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது.

நாட்டின் எதிர்கால அரசியல் நிலையை தீர்மானிக்கும் அதிமுக்கிய தீர்ப்பாக இது அமையவுள்ள நிலையில், தீர்ப்பை எதிர்பார்த்து உயர்நீதிமன்ற வளாகத்தில் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் குவிந்துள்ளனர்.

அத்தோடு, நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக விசேட செய்தியாளர் தெரிவித்தார். மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்தும் ஆதவனுடன் இணைந்திருங்கள்.