இஸ்லாமிய தீவிரவாதிகளின் கொழும்பு குண்டுத்தாக்குதலின் எதிரொலி!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தனர் மத தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றனர் என்ற காரணங்களை கூறி சிங்கள மக்கள் கின்னியம மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலை தகர்த்தனர்.

மேலும்…

குருநாகல்- பூவெல்ல பிரதேச தக்கியாவும் சிங்கள மக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

இஸ்லாமியர்களின் புனித நூல்களும் எரியூட்டப்பட்டது.

மேலும் வன்முறை தொடராதிருக்க இலங்கை அரசாங்கம் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளது.

எனினும் எந்த பள்ளிவாசல் எப்போது தாக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுவதாக அங்கிருக்கும் நபர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டுப்போரில் சிங்களவர்களுக்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் செயற்பட்ட இன்றும் செயற்பட்டுக் கொண்டு வரும் இலங்கை முஸ்லிம்கள் இன்று அதே பெரும்பான்மை சிங்களவர்களால் அடக்குமுறைக்கு ஆளாவது காலத்தின் சோதனையாகும்…

அப்பாவி முஸ்லீம் மக்களின் தனி மனித உரிமை மத உரிமைகளை உறுதிப்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவது காலத்தின் கட்டாயம்…