மீண்டும் பரபரப்பில் இலங்கை அரசியல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஆறு எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தற்போது கொழும்பில் நடந்துவரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

அதைப் போலவே இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீமும் ரணில் விக்கிரம சிங்கே கரத்தை பலப்படுத்துவதாக அறிவித்தார். நாடாளுமன்றம் நவம்பர் 16-வரை ஒத்திவைத்துள்ளனர்.

இதனிடையே நாடாளுமன்றத்தை நவம்பர் 16 வரை ஒத்திவைத்து வர்த்தமாணி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ஜனாதிபதிதான் வெளியிட முடியும்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன-ராஜபக்ஷ அணிக்கு நாடாளுமன்றத்தில் போதிய பலம் இல்லாததால்தான் அதனை ஒத்திவைக்கிறார்கள் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் ரணில் விக்கிரமசிங்கே.

உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டிய கடமை ஜனாதிபதிக்கு உண்டு என்று கூறிய ரணில் உடனடியாக கூட்டுமாறு வேண்டுகோளும் விடுத்தார். சுகாதார அமைச்சர் ராஜிச சேனாரத்னவும் இதே போன்ற கருத்தைத் தெரிவித்தார்.