தெரனியகலயில் ஏழு வயது சிறுமி உட்பட இருவர் வெட்டிக் கொலை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
தெரனியகலயில் ஏழு வயது சிறுமி உட்பட இருவர் வெட்டிக் கொலை

தெரனியகல, மாகல பிரதேசத்தில் ஏழு வயது சிறுமி உட்பட இரண்டு பேர் இனந்தெரியாதவர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (திங்கட்கிழமை) இரவு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலின் போது படுகாயங்களுக்கு உள்ளான சிறுமியின் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 5 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 19 வயது இளைஞன், அப் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites