ஏழு தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் – திமுக

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்களையும் ஆட்சிக்கு வந்தால் விடுவிப்போம் என திமுக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது

இன்றைய தினம் திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தல் திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்

இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறையில் பல ஆண்டுகளாக உள்ள ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சேதுசமுத்திர பணிகள் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் திமுகவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எதிர்ப்பை சந்தித்த நீட்தேர்வு முறை இரத்துசெய்யப்படும் எனவும் திமுக வாக்குறுதியளித்துள்ளது.

பாலியல் குற்றங்களை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் திமுக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது.