ரணிலின் இடத்திற்கு பொன்சேகாவை நியமிப்பதில் ஐ.தே.க மீண்டும் ஆர்வம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சட்டம் ஒழுங்கு அமைச்சராக உள்ள ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்கு பீல்ட் மார்ஸல் சரத்பொன்சேகாவை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆர்வம் காட்டிவருவதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி முன்னதாகவே யோசனையை முன்வைத்திருந்தது. எனினும் இந்த யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்திருந்தார்.

ஆனால்இ தற்போது மீண்டும் சரத்பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.