தேர்தல்களுக்குத் தயாராகுங்கள் – ஐதேகவினருக்கு ரணில் அழைப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

எதிர்காலத் தேர்தல்களுக்குத் தயாராகும்படி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறிகோத்தாவில் ஐதேகவின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கூடுதல் பொறுப்புணர்வுடன் கூடிய கட்சியாக- இளைஞர்களின் பங்களிப்புடன் ஐதேகவை பரந்துபட்ட அளவில் நவீனமயப்படுத்த வேண்டும்.

அமைச்சர்கள் தமது தொகுதிகளில் அதிகளவு நேரத்தைச் செலவிட வேண்டும். மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து தொகுதிகளில் மேற்கொள்ளப்படக் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாட வேண்டும்.

எந்த தேர்தலுக்கு ஐதேக தயாராக இருக்க வேண்டும். தேர்தல் கூட்டு வைத்துக் கொண்டோ கூட்டணி வைத்துக் கொள்ளாமலோ, கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

தேசிய அளவிலான தேர்தல்களுக்கு முன்னதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை” என்றும் அவ6ர் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *