எட்கா உடன்படிக்கை: இறுதி தீர்மானம் எடுக்க பிரதமர் இந்தியா பயணம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெறவுள்ள தொழில்நுட்ப ஒப்பந்தம் (எட்கா) தொடர்பில் இறுதித் தீர்மானங்களை முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமரின் ஜப்பானுக்கான விஜயம் நிறைவடைந்த பின்னர் இந்தியா செல்லவுள்ளார். இவ்விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் பிரதமர் ரணில் சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளமைக்கு பிரதமர் இதன் பொது அழைப்பு விடுவார் என்றும் தெரிய வருகிறது.

பிரதமர் இன்று ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *