நாளை ஜப்பான் செல்கிறார் பிரதமர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தொடக்கம் ஏப்ரல் 16ஆம் திகதி வரை பிரதமர் ஜப்பானில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயைச் சந்தித்து  பிரதமர் கலந்துரையாடவுள்ளதுடன், பல முக்கிய பேச்சுக்களிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், அமைச்சர்கள் கலாநிதி சரத் அமுனுகம, மலிக் சமரவிக்கிரம, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷு மாரசிங்க, மற்றும் அதிகாரிகளும் இந்தப் பயணத்தில் பங்கேற்கவுள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பின்னர், ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *