எந்தநேரத்திலும் ஆணைக்குழு முன் விளக்கமளிப்பதற்கு நான் தயார்! – பிரதமர் ரணில் தெரிவிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றேன்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் குறித்து தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கு விளக்கமளிக்க, எந்த நேரத்திலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராக இருக்கின்றார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பதவி பறிபோனதன் பின்னர் பிணைமுறி விசாரணைகளில் பல அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்களும் சாட்சியளித்திருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியமான உறுப்பினர்களான அமைச்சர் கபீர் ஹாசீம், மலிக் சமரவிக்கிரம ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் பிரதமரும் விசாரணைக்குத் தயார் எனத் தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

loading…


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *