சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்! இறுதி முடிவு இன்று

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்! இறுதி முடிவு இன்று

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நாடாளுமன்றக் கட்டத் தொகுதியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, தீர்க்கமான முடிவை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக, வடக்கு கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் 5 தமிழ் கட்சிகளும் இன்று மாலை கொழும்பில் கூடி கலந்துரையாடவுள்ளன.

இந்தக் கூட்டத்திலேயே, இன்று மாலை இலங்கை நேரப்படி 5 மணிக்கு கொழும்பில் இரா.சம்பந்தனின் இல்லத்தில் ஐந்து கட்சிகளும் சந்தித்துப் பேசுவதென தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக எமது ஆதவன் செய்தி சேவை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை தொடர்புகொண்டு கேட்டபோது, இன்றைய கூட்டத்தின் பின்னர் எந்த வேட்பாளர்களை உடனடியாக சந்திக்க வேண்டும் என்ற முடிவு எட்டப்படும் என தான் நம்புவதாக கூறினார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites